Aug 24

புதுக்குடியிருப்பில் இரகசிய தகவலையடுத்து நிலத்தைத் தோண்டிய பொலிஸார் அதிர்ச்சியில் உறைந்தனர்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தாம் வட்டாரம் புதுக்குடியிருப்பு பகுதியில் மண்ணுக்குள் கிடங்கு தோண்டி மிகவும் சூட்சுமமான முறையில் பதுக்கி விற்பனைக்கு தயாராக வைத்திருந்த 130 பக்கற் கசிப்புடன் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்


இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் டி சரத் சந்ரபாலவின் ஆலோசனைக்கமைய பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் நிலத்தின் கீழ்பதுக்கி விற்ப்பனைக்கு தயாராக வைத்திருந்த 130 பக்கற் கசிப்புடன் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

இந்த சிறிய பக்கற்று ஒவ்வொன்றும் நூறு ரூபாவிற்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் புதுக்குடியிருப்பு பொலிசார் கைது செய்யப்பட்டவரை இன்று நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துவருகின்றனர்