Aug 24

மதுபானம் விற்பனை செய்த 3 பேர் கைது


மன்னார் நகரில் மதுபானம் விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று மாலை மன்னார் நகரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது சந்தேக நபர்களிடம் இருந்து 1300 டிரமடோல் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக காவற்துறை தெரிவித்தது.சந்தேக நபர்கள் 22 மற்றும் 56 வயதுடைய மன்னார் மற்றும் வவுனியா பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.