Aug 24

சுப்ரமணிய சாமி ஓர் மன நோயாளி - தயாநிதி அழகிரி காட்டம்.!

நேற்றைக்கு முன்தினம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சாமி, அழகிரி திமுகவிற்கு தலைவராக முடியாது. இட்லி கடை வைக்கத்தான் அவர் லாயக்கு என விமர்சித்திருந்தார். அதற்கு அழகிரியின் மகன் மிக காட்டமான எதிர்வினையாற்றியுள்ளார்.


திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததன் பின்னர் அக்கட்சியில் சில சலசலப்புகள் நிகழத்துவங்கியுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டே கட்சியிலிருந்து நீக்கப்பட்டவரும், கருணாநிதியின் மகனுமாகிய மு.க அழகிரி தன்னை மீண்டும் கட்சியில் இணைத்து, முக்கிய பதவி வழங்க வேண்டுமென ஸ்டாலின் தரப்பினரிடம் அழுத்தம் கொடுத்து அது நிராகரிக்கப்படவே ஸ்டாலினுக்கு எதிரான சண்டமாருதத்தை தொடங்கிவிட்டார்.

அடுத்த மாதம் 5 ஆம் தேதி சென்னை அண்ணா சாலையிலிருந்து கருணாநிதி சமாதி வரை இலட்சம் பேருடன் அமைதி பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளதுடன், அவ்வப்போது ஸ்டாலின் தரப்பு எதிராகவும் அதிரடியான கருத்துக்களை தெரிவித்துவருகிறார்.

இந்த நிலையில், .அழகிரி இட்லி கடை வைக்கவே சரிபட்டுவருவார் என தெரிவித்திருந்த சுப்ரமணிய சாமி ஓர் மன நோயாளி என காட்டமாக விமர்சித்துள்ளார் தயாநிதி அழகிரி.