Aug 24

வடக்கில் இன்று முதல் ஏற்படவுள்ள மாற்றம்!

வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று முதல் அடுத்த சில நாட்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவில் திணைக்களம் தெரிவித்துள்ளது.


மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் ஓரளவுக்கு மழை பெய்யக் கூடும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.