Aug 24

நோ-டீல் பிரெக்ஸிற்றா? பிரித்தானிய வங்கிஅட்டைக்கு மேலதிக கட்டணம்!

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறிக்கொள்ளும்பிரெக்ஸிற் நகர்வில் இரண்டு தரப்புக்களுக்கும் இடையில் ஒருவேளை உடன்பாடு ஏற்படாமல்விட்டால் (நோ-டீல் பிரெக்ஸிற்) அதற்குப்பின்னர் என்ன நடக்கும்?


இந்த வினாவை மையப்படுத்திய வழிநடத்தல் கையேடொன்று இன்று பிரித்தானியஅரசாங்கத்தால் வெளியிடப்பட்டது.

இதில் நோ-டீல் பிரெக்ஸிற்றுக்குப்பின்னர் ஐரோப்பியஒன்றிய நாடுகளுக்குசெல்லும் பிரித்தானியர்களும் பிரித்தானிய நிறுவனங்களும் கடைப்பிடிக்கவேண்டிய சில நியமங்கள்குறிப்பிடப்பட்டுள்ளன

குறிப்பாக தொழிற்துறை, மருத்துவத்துறை, நிதித்துறை மற்றும் வேளாண்;துறைஆகியவற்றுக்குரிய 25 மாதிரி வழிநடத்தல் கையேடுகள் வெளியாகின.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் உடன்பாடு ஏற்படாதவகையில் பிரெக்ஸிற்றின்முடிவு இருந்தால் அதற்குப்பின்னர் நடைமுறைக்கு வரக்கூடிய விதிகள் இவைதான்….

பிரித்தானியாவில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்லும்பிரித்தானிய குடிமக்கள் தமது வங்கிஅட்டை பாவனைக்காக மேலதிகமான கட்டணத்தை செலுத்தவேண்டும்.

பிரித்தானியாவில் இருந்து ஐரோப்பிய ஒன்றியநாடுகளுக்கு வணிகம்செய்யும் நிறுவனங்களின் பொதிகள் புதியசுங்கபரிசோதனைக்கு உட்படுத்தப்படும். புதிய மென்பொருள்செயலிகளுக்கு வரிவிதிக்கப்படலாம்.

ஐரோப்பியஒன்றிய நாடுகளில் வசிக்கும் பிரித்தானியர்கள் அங்கிருந்துபிரித்தானிய வங்கிகணக்குகளை பயன்படுத்தும் அனுமதியையும் தமது ஓய்வூதியத்தை அங்கு பெற்றுக்கொள்ளும்உரித்தையும் இழப்பார்கள். (ஐரோப்பிய ஒன்றியம் அனுமதித்தால் மாற்றம் வரலாம்.)

ஐரோப்பிய ஒன்றியநாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு வரும் குறைந்தமதிப்புடைய பொதிகளுக்கு இப்போது வழங்கப்படுவது போன்ற வரி நிவாரணம் கிடையாது.