Aug 24

நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளில் 10 சதவிகிதம் போலியானவை தெரியுமா?

உலகம் முழுவதும் விற்பனையாகும் மருந்துகளில் 10 சதவிகிதம் போலியானது என்று சர்வதேச சுகாதார நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது.


குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி என்ற பெயரில் அதிக அளவில் போலி மருந்துகளை விற்பதாகவும் சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது. உலகில் நடமாடும் மொத்த போலி மருந்துகளில் 50 சதவிகிதம் நோய் எதிர்ப்பு மருந்துதான் என்றும் தெரியவந்துள்ளது.

இத்துடன் சத்து மருந்துகள் என்ற பெயரிலும், அதிக அளவில் போலி மருந்துகள் விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் உரிய தரம் இல்லாமலும் ஏராளமான மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக சுகாதார நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

அத்துடன் சட்டப்பூர்வ மற்ற மருந்துகளும் அதிக அளவில் நடமாட்டம் இருப்பதாகவும் சுகாதார நிறுவனம் கவலை வெளியிட்டு இருக்கிறது.

எனவே இந்த விடயம் மக்கள் அதிக கவனத்துடன் செயற்படவேண்டும்.