Aug 24

வாடகை வீட்டில் பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

சூரியவெவ கல்வெவ சந்திக்கு அருகில் வாடகை வீட்டில் நடாத்திச் செல்லப்பட்ட சட்டவிரோத எரிபொருள் களஞ்சியசாலை சுற்றிவளைக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்று மாலை இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ளவர் 36 வயதான பெல்வத்த பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சுற்றிவளைப்பின் போது சுமார் 2 லட்சம் பெறுமதியான டீசலுடன், மோசடிக்காக பயன்படுத்தப்பட்டுள்ள உபகரணங்களையும் காவல்துறை கைப்பற்றியுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சூரியவெவ காவல்துறை மேற்கொண்டு வருகிறது.