Aug 24

ஸ்கார்பரோ சிறுமிகள் மீதான துப்பாக்கி சூடு – இரண்டாவது சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலை

ஸ்கார்பரோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 2 ஆவது சந்தேகநபராய் நேற்று (வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 2 சிறுமிகள் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவந்த ரொறன்ரோ பொலிஸார் 2 ஆவது சந்தேகநபரை கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் அவர் இன்று பழைய சிட்டி ஹால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.