Aug 23

சீன நிறுவனத்தின் மற்றொரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ இந்தியாவில் தனது புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் X போன்ற நாட்ச் ஸ்கிரீன் கொண்ட ஒப்போ ஏ5 மாடல் கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 

6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, 720x1520 பிக்சல், 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம், ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2 , 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4, எல்இடி ஃபிளாஷ் கொண்டுள்ளது. செல்ஃபிக்களை எடுக்க 8 எம்பி கேமரா, ஏ.ஐ. பியூட்டி தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.இந்தியாவில் ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஆஃப்லைன் தளங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஒப்போ நிறுவனம் எஃப்9 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ.23,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.