Aug 23

போர் விமான கொள்வனவில் கனடா தாமதம்! – பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு

போர் விமானங்களை கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தினை செயற்படுத்த கனேடிய ஜனாதிபதி ஜஸ்டின் ட்ரூடோ காலம் தாழ்த்தி வருகிறார் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்றிகோ டுடர்டே குற்றஞ்சுமத்தியுள்ளார்.

பிலிப்பைன்ஸ்சின் கெபு நகரில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.

போருக்காக பயன்படுத்தப்படும் 233 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான விஷேட விமானங்களை பிலிப்பைன்ஸிடமிருந்து கொள்வனவு செய்வதாக ஏற்கனவே கனடா அறிவித்திருந்தது. எனினும், குறித்த ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக கடந்த பெப்ரவரி மாதம் கனேடிய பிரதமர் அறிவித்திருந்தார். இதன் பின்னணியிலேயே பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மேற்குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “கனடாவில் கிளர்ச்சியை ஏற்படுத்தும் இஸ்லாமிய குழுக்கள் மற்றும் கொம்யூனிசவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தவே 16 பெல் போர் விமானங்களை கொள்வனவு செய்யும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. எனினும், அதனை செயற்படுத்த கனடா காலம் தாழ்த்தி வருகின்றது.

கடந்த கால வரலாறு மற்றும் புவியியல் நிலைமைகள் தொடர்பாக கனடா சரிவர புரிந்துகொள்ளாமல் செயற்படுகின்றது.

இதேவேளை, வியட்நாமினால் இரண்டாந்தரமாக பயன்படுத்தப்பட்ட விமானங்களை இறக்குமதி செய்து மீள் திருத்தத்திற்கு உட்படுத்தி புதிய வகையான விமானங்களை தயாரிப்பதே பிலிப்பைன்ஸின் பிரதான நோக்கமென்பது குறிப்பிடத்தக்கது.