Aug 23

எம்பிலிப்பிட்டி மருத்துவமனையின் சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பு


ஊழியர் பற்றாக்குறைக்கு தீர்வு கோரி எம்பிலிப்பிட்டி மாவட்ட பொது மருத்துவமனையின் சிற்றூழியர்கள் தற்போதைய நிலையில் தொடர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

மருத்துவமனையில் 352 சிற்றூழியர்கள் சேவை புரியவேண்டிய நிலையில் , தற்போதைய நிலையில் 219 சிற்றூழியர்கள் மாத்திரமே உள்ளதாக ஜனரஜ சுகாதார சேவை சங்கத்தின் எம்பிலிப்பிட்டி கிளைத் தலைவர் காமினி சுவந்தசேன தெரிவித்தார்.

எவ்வாறாயினும் , இந்த ஊழியர் பற்றாக்குறைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் வரையில் தொடர் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் என அவர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.