Aug 23

டொனால்ட் ட்ரம்பின் பதவிக்கு ஆபத்து


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் உதவியாளர் ஒருவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.நிதிமுறைகேடுகள் தொடர்பில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.இதனால் டொனால்ட் ட்ரம்பின் பதவிக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

ஜனாதிபதி தேர்தலின் போது டிரம்பின் பிரசார குழு தலைவராக இருந்த குறித்த உதவியாளர் உள்ளிட்ட இருவர் ரஷ்ய ஆதரவு அரசியல் கட்சி ஒன்றிடம் இருந்து பல மில்லியன் டொலர்களை பணமாக பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.இது தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளின் முடிவுகளிலே அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.இந்த நிலையில், அவருக்கு குறைந்தது 80 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.