Aug 23

ஹவாய் தீவுகளை தாக்கவுள்ள பாரிய சூறாவளி


பசுபிக் சமுத்திரத்தின் ஹவாய் தீவுகளுக்கு பாரிய சூறாவளி தாக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.இது சூறாவளி வகைகளில் நான்காவது மண்டலத்தை சேர்ந்தது என சர்வதேச வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஹவாய் - ஹொனலுலு , ஓவாலு , மாவுய் ,லஹாய் , மொலகாய் போன்று தீவுகள் இந்த சூறாவளியால் பாதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.மணிக்கு 155 கிலோமீற்றர் வேகத்தில் இந்த சூறாவளி ஹவாய் தீவுகளை நோக்கி நகர்ந்தவண்ணம் உள்ளதாக அந்நாட்டு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

தற்போது , குறித்த சூறாவளி ஹவாய் தீவுகளில் இருந்து சுமார் 315 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் , ஹவாய் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அந்நாட்டு ஹவாய் ஆளுநர் டேவிட் ஈஜ் தெரிவித்துள்ளார்.