Aug 23

வெலிகம கொள்ளையின் பின்னால் புதிய குழு

மாத்தறை - வெலிகம தெனிபிடிய கனிஷ்ட வித்தியாலத்திற்கு அருகில் மரக்கறி வியாபாரியொருவரிடம் இருந்து 12 இலட்சம் ரூபாய் கொள்ளையிடப்பட்ட சம்பவம் புதிதாக உருவான கொள்ளை குழுவொன்றால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பாதுகாப்பு பிரிவு சந்தேகிக்கின்றது.

காவற்துறை விசேட அதிரடிப்படையின் பெயரை பயன்படுத்தி குறித்த கொள்ளை சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை விசேட அதிரடிப்படையின் உயரதிகாரியொருவர் குறிப்பிட்டிருந்தார்.அதன்படி , இவர்கள் புதிதாக உருவான குழுவென சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.நேற்று அதிகாலை இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றிருந்தது.

குறித்த வியாபாரி நேற்று அதிகாலை தெனிபிட்டி சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றிற்கு அருகில் அவரது வாகனத்தை நிறுத்தி நடந்து சென்றுக்கொண்டிருந்த போது பின்னால் வந்த மூவர் அவரை சோதனையிட வேண்டும் என தெரிவித்து அவரிடம் இருந்த பணத்தினை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.