Aug 23

காலையிலே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள செய்தி...


யாழ்ப்பாணம் - சாவகச்சேரி அரசடி சந்தியில் உந்துருளியில் பயணித்த இரண்டு இளைஞர்கள் தொடருந்துடன் மோதி இடம்பெற்ற விபத்தில் பலியாகினர்.நேற்று இரவு 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தொடருந்துடன், உந்துருளியில் பயணித்த இருவர் சாவகச்சேரி அரசடி சந்தியில் வைத்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.மட்டுவில்லைச் சேர்ந்த 22 மற்றும் 23 வயதுடைய இரண்டு இளைஞர்களே சம்பவத்தில் உயிரிழந்தனர்.

தொடருந்துக் கடவையில் பொருத்தப்பட்டுள்ள சமிஞ்ஞை விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தபோதும், தொடருந்து அண்மித்த தூரத்தில் வருவதை அவதானித்த உந்துருளியில் பயணித்தவர்கள், அதிவேகமாக கடவையைக் கடக்க முற்பட்டுள்ளனர்.இதன்போதே குறித்த விபத்து இடம்பெற்றதாக எமது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி காவல்துறையினர் மேலலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்