Aug 23

சித்தராமையாவுக்கு துணை ஜனாதிபதி பதவி - கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா புது வியூகம்

பா.ஜனதாவுக்கு தன்னிச்சையாகவே பெரும்பான்மை கிடைத்துவிடும். இதன் மூலம் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமையும் என்று சொல்கிறார்கள். இதுபற்றி தகவல் அறிந்து வைத்துள்ள குமாரசாமி, அந்த திட்டத்தை முறியடிக்க தன்னிடம் ஒரு திட்டத்தை தயாரித்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சிலரை இழுத்து ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள குமாரசாமி திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க சித்தராமையா ஏன் முயற்சி செய்கிறார் என்ற கேள்வி அனைவரிடமும் எழுகிறது. கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி அமைத்தபோதும், அந்த ஆட்சி அமைந்த பிறகும் சித்தராமையாவை காங்கிரஸ் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக பேசப்படுகிறது. தன்னை புறக்கணித்த காங்கிரசுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்பது தான் சித்தராமையாவின் எண்ணமாக உள்ளதாக சொல்லப்படுகின்றன.

பா.ஜனதா சார்பில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், சித்தராமையாவை தொடர்பு கொண்டு பேசியதாகவும், 2022-ம் ஆண்டில் துணை ஜனாதிபதி பதவியை வழங்க பா.ஜனதா தயாராக இருப்பதாகவும் கூறியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

பா.ஜனதா மதவாத கொள்கையை பின்பற்றி வருவதாக மேடைக்கு மேடை பேசி வரும் சித்தராமையா அக்கட்சியை கடுமையாக குறை கூறுகிறார். அப்படிப்பட்ட மதசார்பற்ற கொள்கையை கொண்ட பா.ஜனதாவுக்கு சாதகமாக அவர் செயல்படுவாரா? என்ற கேள்வி மதசார்பற்ற கொள்கையை பின்பற்றும் அரசியல் வாதிகள் இடையே எழுந்துள்ளது.