Aug 23

இலங்கை நீச்சல் வீரர்களுக்கு தொடர் ஏமாற்றம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை நீச்சல் வீரர்கள் தங்கம் பதக்கம் வெல்வதற்கு காணப்பட்ட வாய்ப்பு நேற்று கைநழுவிப்போனது. 100ஒ4 மீற்றர் நீச்சல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இலங்கை நீச்சர் வீரர்கள் போட்டி விதிகளை மீறிச் செயற்பட்டதால் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இழக்கப்பட்டது.

100ஒ4 மீற்றர் நீச்சல் போட்டியில் இலங்கை நீச்சல் வீரர்களான மத்தியூ அபேசிங்க, கைல் அபேசிங்க, சேரந்த.டி.சில்வா மற்றும் அகலங்க பீரிஸ் ஆகியோர் பங்கேற்றனர். இப்போட்டியில் இலங்கைக்கு ஆறாவது தடம் கிடைத்திருந்தது. இதில் முதலாவது சுற்றை காமினி சிறப்பாக நீத்திக் கடந்து இரண்டாவது நிலையை அடைந்தார்.

அதன் பின்னர் மத்தியூ இரண்டாவது சுற்றில் நீந்தினார். இவர் இறுதி இலக்கை அடைவதற்கு முன்னர் மூன்றாவதாக நீந்தவிருந்த கைல் அபேசிங்க நீந்த ஆரம்பித்தார். இது போட்டிவிதியை மீறுவதாக அமைந்தது. இதனால் இலங்கை அணி இந்தப் போட்டியிலிருந்து விலகவேண்டி ஏற்பட்டது.

இருந்தபோதும் இலங்கை நீச்சல் வீரர்கள் போட்டியில் நான்காவதாக நிறைவுசெய்தனர்.

இதேபோன்ற தவறு பொதுநலவாய விளையாட்டுப் போட்டியிலும் சேரந்த.டி.சில்வாவினால் இழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.