Aug 22

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

சட்டவிரோதமாக இந்நாட்டு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டுள்ள 8 இந்திய மீனவர்களும் அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை இன்றைய தினம் புத்தளம் நீதவான் அநுர இந்திரஜித் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கற்பிட்டி– கதிரமலை கடற்பரப்பில் நேற்று மாலை இவர்கள் மீன்பிடியில் ஈடுபட்ட போது கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.