Aug 22

பறவையுடன் செல்பி ; மாணவனுக்கு நேர்ந்த கதி.!

Image

வீடு, அலுவலகம் துவங்கி பொது இடங்கள் வரை எல்லா இடங்களிலும் செல்பி புகைப்படம் எடுத்துக்கொள்ளும் பழக்கம் உலகம் முழுவதும் இன்றைய தலைமுறையை அதிகமாகவே ஆட்கொண்டிருக்கிறது. அதன் காரணமாக பல விபரீதங்களும் நிகழ்கின்றன.

அப்படியானதோர் விபரீதம் நமீபியாவில் நிகழ்ந்துள்ளது. நமீபியில் படகு ஒன்றில் பயணிகளுடன் இணைந்து பயணித்துக்கொண்டிருந்த கூழைக்கிடா பறவையின் அலகுக்குள் தனது தலையை விட்டு செல்பி புகைப்படம் எடுத்து அதனை பகிர்ந்துள்ளார் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஜீவான்.

இந்த நிலையில், செல்பி எடுப்பதற்காக பறவையை துன்புறுத்தியதாக ஜீவான் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.