Aug 22

ஐஎஸ்ஐஎஸ் கொடியினை ஏந்திச் சென்ற இஸ்லாமிய இளைஞர்கள்.!

Image

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பக்ரீத் வழிபாடு முடிந்த சில நிமிடங்களிலேயே இளைஞர்கள் சிலர் பாகிஸ்தான் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு கொடிகளுடன் கோஷம் எழுப்பிவலம் வந்தனர். இதனால், அந்த பகுதியில் கூடிய இளைஞர்களைகலைக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.

ஆனால், இளைஞர்கள் கலைந்து போகாமல் பாதுகாப்புபடையினர் மீது கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு மக்களை அதிர்ச்சியடைய செய்தது.

முன்னதாக, தீவிரவாத மற்றும் பயங்கரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் உலகமுழுவதுமுள்ள இஸ்லாமிய மற்றும் இதர இளைஞர்களுக்கு தவறான போதனைகளை கற்பித்து அவர்களை தீவிரவாத செயல்பாடுகளுக்கு பயன்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.