Aug 22

மக்கள் பேரணியில் பங்கேற்க வருமாறு சம்பந்தனுக்கு ஒன்றிணைந்த எதிரணி அழைப்பு


கொழும்பில் அடுத்த மாதம் தாம் நடத்தத் தீர்மானித்துள்ள மக்கள் பேரணியில் பங்கேற்க வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு ஒன்றிணைந்த எதிரணி அழைப்பு விடுத்துள்ள கொழும்பில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் பிரதிநிதியான அருண் தம்பிமுத்து இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை உரிய முறையில் முன்னெடுக்க முடியாவிட்டால், அந்தப் பதவியைக் கைவிட்டு அரசாங்கத்துடன் இணைவதே தகுந்த முடிவாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.