Aug 22

தன் காயத்திற்கு தானே கடைக்கு சென்று பேண்டேஜ் வாங்கிய நாய்! தீயாய் பரவும் காணொளி

கால்களில் அடிப்பட்டிருந்த நாய் வழிபோக்கரிடம் பணம் பெற்று தானே கடைக்கு சென்று பேண்டேஜ் வாங்கிய நாயின் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது,

மெக்சிக்கோ மாகாணம் டெசொயூகா நகரில் தெரு நாய்க்கு காலில் அடிப்பட்டுள்ளது. உடனே அந்த நாய் சாலையில் நின்றுகொண்டிருந்த நபரிடம் பணம் கேட்டுள்ளது.

அதனை வாங்கி கொண்ட நாய் கடைக்கு சென்று பேண்டேஜ் வாங்கி காலில் போட்டுக்கொள்ள முயற்சி செய்துள்ளது.இது குறித்த காணொளி சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.