Aug 22

கையொப்பங்கள் இன்மையால் ரையன் எயார் இழப்பீட்டு காசோலைகள் மீளத் திரும்பின!

ரையன் எயார் (Ryanair) விமான பயணிகளின் ரத்து செய்யப்பட்ட மற்றும் தாமதிக்கப்பட்ட விமான பயணங்களுக்கான இழப்பீட்டு காசோலைகள் உரிய அதிகாரியின் கையொப்பங்கள் இன்மையால் மீளத் திரும்பியுள்ளன. அத்துடன் வங்கிகள் அவற்றை நிராகரித்ததன் விளைவாக கூடுதல் கட்டணங்களும் அறவிடப்பட்டுள்ளன.

ஏராளமான பயணிகள் விமான நிலையத்திலிருந்து அனுப்பப்பட்ட காசோலைகளைப் பெற்றதாகவும், அவற்றை வங்கியில் வைப்பு செய்த போது தமக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

ஒரு பயணி கடந்த 11 மாதங்களாக இழப்பீட்டு தொகைக்காக காத்திருந்ததாகவும், தற்போது வங்கியினால் 20 யூரோக்கள் (£17.94) அறவிடப்பட்டதன் காரணமாக பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும் கூறினார். எனினும், இந்த பிரச்சினைக்கு மன்னிப்பு கோரியுள்ள ரையன் எயார் நிறுவனம் இதுவொரு நிர்வாக தவறென விபரித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம், ஐரோப்பாவின் ரையன் எயார் விமான பயணிகள் சுமார் பத்து லட்சம் பேரின் பயணங்கள் தாமதப்பட்டோ அல்லது ரத்து செய்யவோ நேர்ந்ததாக விமான நிலையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.