Aug 22

குருபானந்தனின் கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது


கொழும்பு மோதரை பகுதியில் கொள்ளைச்சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

கொழும்பு நகரசபை உறுப்பினர் கிருஷ்ணபிள்ளை குருபானந்தன் என்பவர் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தார்.இந்த சம்பவத்திற்கும் கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபருக்கும் தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெசல்வத்தை பகுதியில் பொதி ஒன்றிலிருந்து மீட்கப்ட்ட வெட்டப்பட்ட நிலையிலான தலைப்பகுதி ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.