Aug 22

காவற்துறை சுற்றிவளைப்பு பெண் மற்றும் ஆண் கைது!!


பெஹலியகொடை மாவட்ட குற்றவியல் பிரிவினால் ஜா-ஹெல காவற்துறை பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயினும் பெண்ணொருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜா-ஹெல - கலுபாலம , கணுவன தொடரூந்து கடவை மற்றும் ஜா-ஹெல - மினுவங்கொடை வீதியில் குறித்த சந்தேகநபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்தது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து 17 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை , கொம்பனித்தெரு - வேகந்த வீதியில் மற்றும் புதுக்கடை - வாழைத்தோட்டம் பிரதேசத்தில் 25 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு பேர் நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர்.