Aug 22

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கொள்ளைச்சம்பவங்கள்....!


நாட்டின் பல்வேறு பகுதிகளில் மூன்று கொள்ளைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.இதற்கமைய, வெலிகம தெனிபிட்டி பகுதியில் மரக்கறி வர்த்தகர் ஒருவரிடம் 12 இலட்சம் ரூபாய் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை மரக்கறி கொள்வனவிற்காக நுவரெலியா செல்ல முயற்சித்த வேளையில் இந்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.12 இலட்சம் ரூபாய் பணத்துடன் தனது வாகனத்திற்கு ஏறுவதற்காக சென்றுக்கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாத நபர்கள் ஆயுத முனையில் அச்சுறுத்தி கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

அத்துடன் மாத்தளை கந்தர பகுதியில் வங்கி ஒன்றில் 3 இலட்சம் ரூபாய்கொள்ளையிடப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, மாதம்பை புதிய நகரம் பகுதியில் நபர் ஒருவரிடம் கொள்ளையிட முயற்சித்த வேளையில் கொள்ளையர் மடக்கி பிடிக்கப்பட்டு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் 475.000.00 ரூபாய் பணம் காணப்பட்டதாகவும் அதனை கொள்ளையிடுவதற்கே குறித்த நபர் முயற்சித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.