Aug 22

வேதன முரண்பாட்டை தீர்ப்பதற்கான ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் வர்த்தமானியில்...


அரச ஊழியர்களின் வேதன அதிகரிப்பு மற்றும் நிலவும் வேதன முரண்பாடுகளை தீர்த்துக்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கான ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் விபரங்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.எஸ்.ரனூக் தலைமையிலான இந்த குழுவில் 15 உறுப்பினர்கள் அடங்குகின்றனர்.அரச ஊழியர்களின் வேதன முரண்பாடு தொடர்பில் நீண்ட ஆய்வின் பின்னர் குறித்த முரண்பாட்டை குறைத்தல் மற்றும்சிறந்த வேதன கட்டமைப்பொன்றை அரச பிரிவுக்கு வழங்குதல் ,தொழிலாளர் சந்தை மூலம் தகுதியான அதிகாரிகளை இணைத்துக்கொள்ளல் போன்ற பிரதான விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்துபரிந்துரைகளை முன்வைப்பது இந்த குழுவின் பணியாகும்.இரண்டு மாதங்களுள் இந்த குழுவால் குறித்த பரிந்துரைகள் முன்வைக்கப்படும் என கூறப்படுகிறது.