Aug 22

யுத்த காலத்தில் செயலிழந்த மயிலிட்டி துறைமுகம் இன்று மீளத் திறப்பு!

யுத்தம் காரணமாக செயலிழந்த யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம், புனரமைக்கப்பட்டு இன்று (புதன்கிழமை) திறந்து வைக்கப்படவுள்ளது.துறைமுக திறப்பு விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.இலங்கையின் மீன்பிடித்துறையில் 30 வீத பங்களிப்பை செலுத்திவந்த, மயிலிட்டி துறைமுகமானது, கடந்த கால யுத்தம் காரணமாக செயலிழந்தது.

இந்நிலையில், 2018ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தினூடாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இத்துறைமுகம் புனரமைக்கப்பட்டுள்ளது.இத்துறைமுகமானது வட மாகாண பொருளாதார அபிவிருத்தியில் பாரிய அளவில் பங்களிப்பு செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் கடந்த 27 வருடங்களாக முடக்கப்பட்டிருந்த யிலிட்டி மீன்பிடித் துறைமுகம், கடந்த 2017ஆம் ஆண்டே விடுவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.