Aug 22

கேரளாவிற்கு ஆறுதல் கூறிய கனடிய பிரதமர்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

வரலாறு காணாத வெள்ளத்தால் கேரள மாநில பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 400 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

இந்நிலையில் கேரள வெள்ளம் தொடர்பாக கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், கேரளாவில் வெள்ளத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு கனடா தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறது என பதிவிட்டுள்ளார்.