Aug 22

மின்னேரிய தீப்பரவல் கட்டுக்குள்..!


மின்னேரிய வனப்பகுதியில் திடீர் தீப்பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நேற்று பிற்பகல் ஏற்பட்ட இந்த தீயினால் 20 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு சேதமடைந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.காவற்துறையினர் , இராணுவத்தினர் மற்றும் தமன்கடுவ பிரதேச செயலகத்தின் தீயணைப்பு பிரவினர் இணைந்து இந்த தீப்பரவலினை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.