Aug 22

ஜெர்மனியில் ராகுல்.. அடுத்து இங்கிலாந்து

காங்., தலைவர் ராகுல், 4 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து சென்றுள்ளார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.

காங்., தலைவர் ராகுல், டில்லியிலிருந்து நேற்று(ஆக.,21) ஜெர்மனி கிளம்பி சென்றார். அங்கு, அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்து பேசும் அவர், வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் கலந்துரையாட உள்ளார். மேலும் ஹம்பர்க், பெர்லினில் நடைபெறும் கூட்டங்களில் பேச உள்ளார்.

ஜெர்மனி சுற்றுப்பயணத்தை முடித்தபின் 24, 25(ஆக.,24, 25) இங்கிலாந்து செல்லும் ராகுல், வர்த்தக நிறுவனங்களின் அதிகாரிகளையும், வெளிநாடு வாழ் இந்தியர்களுடனும் கலந்துரையாடுகிறார். காங்., தலைவராக ராகுல் பொறுப்பேற்ற பின், அவர் செல்லும் 2வது வெளிநாட்டு சுற்றுப்பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.