Aug 22

கணவருக்கு பாடம் புகட்ட பிள்ளைகளுக்கு நஞ்சு கொடுத்த தாய்....!


சிசிலி தீவில் பெலர்மோ நகரில் இலங்கை பெண் ஒருவர் தனது இரு பிள்ளைகளுக்கு உணவுடன் விசத்தினை கொடுத்து தாமும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் பெலர்மோ நகரில் தனது கணவர் மற்றும் இரு பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார்.கணவர் சற்று மேலைத்தேய கலாசாரத்தினை விரும்புவதாக தெரிவித்து தினமும் மது போதையில் வீட்டுக்கு வருவது வழக்கமாகும்.

பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த பல தடவைகள் கணவருக்குஅறிவுறுத்தியும் அவர் திருந்துவதாக இல்லை.மனைவியை தினமும் தாக்குவதும் சித்திரவதை செய்வதுமாக காலத்தை கடத்தியுள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்பிய பின்னர் மனைவியுடன் வாய்தர்க்கத்தில் ஈடுப்பட்டுள்ளார்.இதன்போது இருவருக்குமிடையில் வழமையை விட வாய்தர்க்கம் அதிகரிக்க சரமாரியாக ஒருவரை ஒருவர் நிந்தித்துக்கொண்டனர்.இந்நிலையில் கணவர் மனைவியை விட்டு பிரிந்து செல்ல தீர்மானம் மேற்கொண்டார்.அதற்கமைய மனைவியிடம் கூறிவிட்டு அவர் அங்கிருக்கு சென்று விட்டார்.

கணவர் தன்னை தனிமையில் விட்டு சென்றமையை தாங்கிக்கொள்ள முடியாத மனைவி மனக்கவலையால் விசத்தினை எடுத்து சுப் கட்டியுடன் கரைத்து தனது மூன்று வயது மகளுக்குமுதலில் பருக கொடுத்துள்ளார்.

அம்மா : மகள் அப்பா இன்றைக்கு வீட்டிற்கு வருவதற்கு நேரம் செல்லலாம்... அதுவரையில் இந்த சுப் இணை குடியுங்கள் .

மகள் : அம்மா அப்பா வரும் வரை நான் காத்திருப்பேன்... எனக்கு சுப் வேண்டாம் அம்மா...

அம்மா : என்னுடைய தங்கம்... என்னுடை மகள் தானே நான் சொல்வதை மறுக்க மாட்டாள்... குடியுங்கோ பார்ப்பம்....

எதுவுமே அறியாத அந்த குழந்தை விசம் கலந்த சுப்பினை பருகியுள்ளது.

சிறிது நேரத்தில் சிறுமியின் விழியின் அசைவுகள் குறைவடைந்த நிலையில், மயக்கமுற்றாள்.எஞ்சியுள்ள விசத்தினை தேக்கரண்டியில் அள்ளி தனது ஒரு வயதுயுடைய மகளுக்கு கொடுத்துள்ளார்.தனது ஒரு வயது மகளுக்கு பருகச்செய்யும் அதேவேளை தாமும் பருகியுள்ளார்.இந்த தருணத்தை பார்த்து அயல் வீட்டிலிருந்து வருகை தந்த பெண் ஒருவர் மூவரின நிலையையும் பார்த்து விட்டு அவசர நோயாளர் காவு வண்டி சேவைக்கு அறிவித்து வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளார்.

வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ள பிள்ளைகளின் நிலை கவலைக்கிடமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த தாயை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளதோடு காவற்துறை பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் சிகிச்சையளித்து வருகின்றனர்.பிள்ளைகளுக்கும் விசம் கொடுத்து தாமும் தற்கொலை செய்ய முயற்சித்தமைக்கான காரணத்தினை காவல் துறையினர் வினவியுள்ளனர்.இதற்கு பதிலளித்த குறித்த இலங்கை பெண்... தனது கணவருக்கு உகந்த பாடம் புகட்டவே இவ்வாறு செய்ததாக அழுதுகொண்டே கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.