Aug 22

கொஸ்மல்லியின் தலையை கொண்டு வந்த சகோதரர்கள்

புத்துக்கடை நீதிமன்றத்திற்கு அருகில் கொஸ்மல்லி என்ற சாந்த குமாரவின் தலையை கொண்டு வந்த போட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பாதாள குழுவின் சகோதரர்கள் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.வெல்லம்பிட்டியில் வைத்து நேற்று முன்தினம் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கொழும்பு - ஜம்பட்டா வீதியை சேர்ந்த 21 வயதுடைய பழனி ரிமோஷன் மற்றும் அவரின் 25 வயதுடைய மூத்த சகோதரர் ஆகியோரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் இருவரும் ஜம்பட்டா வீதியில் பாரியளவில் ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 'செல்வி' என்ற பெண்ணின் பிள்ளைகள் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தனது தாயை கொலை செய்தமை மற்றும் தந்தையை சுட்டு படுகாயமடையச் செய்த பாதாள குழுவுடன் தொடர்புடைய நபர்களை , இவர்கள் கொலை செய்துள்ளதாக கொழும்பு குற்றவியல் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.