Aug 22

கேரள கனமழை பாதிப்புக்கு விளாடிமிர் புடின் இரங்கல் - ஜனாதிபதி, பிரதமருக்கு ரஷிய அதிபர் கடிதம்

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு சேதங்களில் பங்கு கொள்வதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், தோழமையுள்ள ரஷ்யா இந்திய மக்களின் துக்கத்தில் பங்குகொள்கிறது. இந்த இயற்கைப் பேரிடரில் காயம் அடைந்தவர்களும் விரைவில் நலமடைவார்கள் என நம்புகிறோம் என்று எழுதியுள்ளார். 

இதுதொடர்பாக, இந்தியாவுக்கான ரஷிய தூதர் நிகோலய் குடசேவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளா மாநிலத்தின் வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட பெருத்த சேதத்துக்கு பலர் பலியாகியுள்ளனர். கேரளா துயரத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.