Aug 21

லிந்துலை நகர சபையின் பிரதித் தலைவருக்கு பிணை

கைது செய்யப்பட்ட தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் பிரதித் தலைவர் எல்.பாரதிதாசன் ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் , அதனுடன் தொடர்புடைய வழக்கை எதிர்வரும் 18ம் திகதி மீண்டும் அழைக்க நுவரெலியா நீதவான் பபுத ஜயசேகர உத்தரவிட்டார்.சென்ட்க்லேயார் தோட்டத்தின் காணித்துண்டுகள் சிலவற்றை பலவந்தமாக கையகப்படுத்தியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக அவர் இன்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.