Aug 21

ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட அரசாணை ரத்து.!

Image

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலை நச்சு கழிவுகளை வெளியிடுவதாக கூறி அந்த ஆலையை மூட வேண்டுமென தொடர்ச்சியாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்திவந்தனர். கடந்த மே மாத இறுதியில் நடத்தப்பட்ட ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது சுமார் 13 பொதுமக்கள் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதனையொட்டி எழுந்த அழுத்தத்தின் காரணமாக ஸ்டெர்லைட் தொழிற்சாலை செயல்பட நிரந்தரமாக தடை விதிப்பதாக அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. அரசின் இந்த அரசாணையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயம் சென்றது ஸ்டெர்லைட் நிர்வாகம்.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையை ஓய்வு பெற்ற ஹைகோர்ட் நீதிபதி சந்துரு ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அவர் அளிக்கும் பரிந்துரைகளை கொண்டே அடுத்த கட்ட தீர்ப்புகள் அளிக்கப்படுமென தெரிகிறது.