Aug 21

வெறுக்கத்தக்க பேச்சுக்களால் கனடா ஆபத்தான நிலைக்கு செல்லும்: பிரதமர்

வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் பிரிவினை அரசியல் என்பன கனடாவை ஆபத்தான பாதைக்கு கொண்டுச் செல்லும் என, பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஒட்டாவாவில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், இவ்வாறான பிரிவினைவாத செயற்பாடுகளை தகர்த்தெறிய நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

கியூபெக்கில் கடந்த வாரம் இடம்பெற்ற பேரணியொன்றில் கலந்துக் கொண்டிருந்த பெண்ணை, பிரதமர் இனவெறியாளன் மற்றும் சகிப்புத்தன்மையற்றவர் என பிரதமர் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக வினவிய நிலையில் அதற்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டிருந்த பெண், கனடா – அமெரிக்க எல்லையை தாண்டிவரும் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் வருகையின் விளைவாக ஏற்பட்ட செலவீனங்களை கியூபெக் அரசாங்கத்திற்கு மத்திய அரசாங்கம் திருப்பித் தருமா என கோஷமெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.