Jun 06

மனித நேயத்திற்கு முன்னுதாரணம்! தனது கண்ணை தானமாக கொடுத்த விஜய் சேதுபதி!

தமிழ் சினிமா ஹீரோ விஜய் சேதுபதி தனது கண்ணை தானமாக கொடுத்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது தமிழில் பல படங்களில் நடித்து வரும் அவர், மதுரையில் அகர்வால் கண் மருத்துமனையின் கிளையை திறந்து வைக்க சென்றிருந்தார்.

அப்போது பேசிய அவர், தனது கண்ணை தானமாக கொடுப்பதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தன்னுடைய ரசிகர்களையும் கண் தானம் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்தும் கலந்து கொண்டார்.