Aug 21

ஹம்பர் கல்லூரி அருகே துப்பாக்கி சூடு: ஆபத்தான நிலையில் இளைஞர்!

ரொறன்ரோ – ஹம்பர் கல்லூரி அருகே இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த இளைஞர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹம்பர்லைன் டிரைவ் மற்றும் உட்லோட் க்ரெஸ்ஸன் பகுதியில் நேற்று  இரவு 9 மணியளவில், குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதிக்கு சென்ற பொலிஸா,ர், படுகாயமடைந்த நிலையில் இருந்த இளைஞருக்கு முதலுதவிகளை வழங்கியிருந்ததுடன் பின்னர் வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.

மேலும் இதில் காயமடைந்தவர் 20 வயதுடையவர் என்றும், அவர் தொடர்பிலும், சம்பவம் தொடர்பிலும் மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிடவில்லை.

இந்நிலையில் மேலதிக விசாரணைகளை ரொறன்ரோ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.