Aug 21

போலி நாணயத்தாள்களை வைத்திருந்த இளம் பெண்களுக்கு நேர்ந்த கதி

அம்பாறை உஹன பகுதியில் போலிய நாணயத்தாள்களுடன் யுவதிகள் இருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூவரும் எரிபொருள் நிரப்பும் நிலையம் சிறப்பு சந்தை தொகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலி நாணயத்தாள்களை மாற்றுவதற்கு முயற்சித்துள்ளனர்.காவல் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்தே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

23 மற்றும் 24 வயதுகளையுடைய யுவதிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.