Aug 21

பொலிஸ் நிலையத்திற்குள் கத்தியுடன் நுழைந்த நபர் சுட்டுக்கொலை!

ஸ்பெயினில் பொலிஸ்நிலையத்திற்குள் கத்தியுடன் நுழைந்து தாக்குதலை மேற்கொள்ள முயன்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

காட்டலோனியாவின் கோர்னெலாவில் உள்ள பொலிஸ் நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதிகாரிகள் இது பயங்கரவாத தாக்குதல் முயற்சியாக இருக்கலாம் என தெரிவித்த பொலிஸார் குறிப்பிட்ட நபர் பொலிஸ்நிலையத்திற்குள் நுழைந்தவுடன் அல்லாகு அக்பர் என கோசமிட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கோர்னெலாவில் வசித்து வந்த அல்ஜீரிய பிரஜையே பொலிஸ் நிலையத்திற்குள் கத்தியுடன் நுழைந்து தாக்குதலை மேற்கொள்ள முயன்றார் என பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவ் விடயம் தொடர்பாக பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்க உடனடியாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் குறிப்பிட்ட பொலிஸ்நிலையத்தை சுற்றிவளைத்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் உடலை அகற்றியுள்ளனர்.

மேலும் பொலிஸ் நிலையத்திலிருந்து அருகில் உள்ள சந்தேகநபரின் வீட்டையும் காவல்துறையினர் சோதனையிட்டுள்ளனர். கடந்த வருடம் காட்டலோனியாவில் ஓகஸ்ட் 17 ம் திகதி பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்ற நிலையிலேயே நேற்றும் அதுபோன்றதொரு முயற்சி இடம்பெற்றுள்ளது.

கடந்த வருடம் ஓகஸ்ட் 17 ம் திகதி இடம்பெற்ற வான் தாக்குதல் மற்றும் கத்திக்குத்து சம்பவங்களில் 16 பேர் கொல்லப்பட்டனர். ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதல்களிற்கு உரிமை கோரியிருந்தது. எனினும் குறித்த இந்த கம்பவம் தொடர்பாகவும் நபர் தொடர்பாகவும் இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.