Aug 21

ஒரு வாரம் கணவருடன்… அடுத்த வாரம் காதலனுடன் வாழும் இளம்பெண்


பின்லாந்தில் திருமணமான பெண் கணவர் அனுமதியுடன் இன்னொரு நபரை காதலித்து வரும் நிலையில் வாரம் ஒருவருடன் மாற்றி மாற்றி வசித்து வருகிறார்.


சாரா மரியா (32) என்ற பெண் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வில்லி (34) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் ஜானி (28) என்ற இளைஞரை சாரா சந்தித்த நிலையில் அவருடன் காதல் ஏற்பட்டது.மனைவியின் காதல் விவகாரத்தை தெரிந்து கொண்ட வில்லி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஏற்று கொண்டுள்ளார்

இதையடுத்து சாரா ஒரு வாரம் தனது கணவர் வில்லியுடனும், ஒரு வாரம் காதலன் ஜானியுடனும் வசித்து வருகிறார்.

சாரா கூறுகையில், ஒரே நேரத்தில் இருவரை திருமணம் செய்து கொள்ள பின்லாந்து சட்டத்தில் இடமில்லை.
வில்லியை சட்டபூர்வமாக திருமணம் செய்துள்ளேன், வரும் 2020-ல் ஜானுடன் காந்தருவ திருமணம் போன்ற விடயத்தை செய்யவுள்ளேன். இது நான் அவரை ஏற்று கொண்டதற்கு சாட்சியான திருமணம் ஆகும்.

நாங்கள் மூவரும் விரைவில் ஒன்றாக சேர்ந்து வசிப்போம் என நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்