Aug 21

கேரளாவுக்கு நிதி மற்றும் பொருளுதவியை மாத இறுதிக்குள் ஒப்படைக்க வேண்டும்; திருமாவளவன் வேண்டுகோள்

கேரளாவுக்கு மாவட்டம் வாரியாக நிதி மற்றும் பொருளுதவியை கட்சி தலைமை அலுவலகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ஒப்படைக்க  வேண்டும். என்று தொண்டர்களுக்கு விடுதலைசிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருமாவாளவன்  வெளியிட்ட அறிக்கை: கேரளாவுக்கு மத்திய அரசு ரூபாய் 500கோடி நிதி உதவி செய்வதாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு உட்பட பல மாநில அரசுகள்  தங்களால் இயன்ற நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளன. கேரள வாழ் மக்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளும் மனிதநேய அடிப்படையில் உரிய  பங்களிப்பை செலுத்த வேண்டிய கடமை உள்ளது.

எனவே, மாவட்ட வரியாக தங்களால் இயன்ற நிதி மற்றும் பொருளுதவியை விடுதலை சிறுத்தை கட்சியினர் கட்சியின் தலைமை அலுவலகத்தில்  ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் கொண்டுவந்து ஒப்படைக்க வேண்டும்.

அவற்றை உரிய வழிமுறைபடி கேரள மக்களுக்கு சேர்க்கும் நடவடிக்கைகள்  மேற்கொள்ளபடும். எனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்டுகோப்பாக ஒருங்கிணைந்து நிவாரணப் பொருட்களைச் சேகரித்து தலைமை அலுவலகதத்தில்  ஒப்படைக்க வேண்டும்.