Aug 20

எம்பிலிப்பிட்டி மருத்துவமனையில் சுகாதார ஊழியர்கள் எதிர்ப்பில்...

எம்பிலிப்பிட்டி மாவட்ட மருத்துவமனைக்கு முன்னாள் அதன் சுகாதார ஊழியர்கள் குழுவொன்று தற்போதைய நிலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவமனையினுள் காணப்படும் ஊழியர் பற்றாக்குறைக்கு தீர்வினை பெற்றுத்தர அதிகாரிகள் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளவில்லை என தெரிவித்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.