Aug 20

மழை விட்டும் தூவானம் விடவில்லை ; மறக்க முடியுமா கலைஞரின் வசனத்தை.!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தமிழ் சினிமா துறையில் அதிக புகழ்பெற்ற வசனக்காரர். பராசக்தி தொடங்கி, மந்திரி குமாரி, பூம்புகார் என நீளும் அவர் எழுதிய திரைப்பட வசனங்கள் என்றென்றும் புகழ் மிக்கவையாக இருக்கும்.


அதேபோல், ஈழத்தில் 2009 ஆம் ஆண்டு தொப்பூழ் கொடி உறவுகளால் அன்னை தமிழ்சாதியின் மீது சிங்கள அரசு இறுதி யுத்தத்தினை கட்டவிழ்த்துவிட்ட போது பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.

பாயும் புலி பண்டார வன்னியன் ஆண்டதாக கூறப்படும் தேசத்தில் தமிழ்ச்சாதியின் ஓலம் முடிவற்றதாக தொடர்ந்துகொண்டே இருந்தது. இந்த நிலையில் தான் யுத்தத்தை நிறுத்த கோரி தமிழகத்தில் பெரிய அளவிலான போராட்டம் வெடித்தது. முத்துக்குமார் தொடங்கி, செங்கொடி வரை போர் நிறுத்தம் கோரி தீக்குளித்து மாண்டனர்.

ஈழ ஆதரவு தலைமைகள் பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்துவந்த நிலையில், மத்தியில் காங்கிரஸ் அரசுடன் கூட்டு வைத்திருந்த கருணாநிதி அவர்கள் தமது துணைவியார் ராஜாத்தியம்மாள் உடன் மெரினாவில் மூன்று மணி நேரம் உண்ணாவிரதம் இருந்துவிட்டு, போர் நிறுத்தப்பட்டு விட்டதாக தெரிவித்துவிட்டு சென்றார்.

போர் நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும். இல்லாவிடில் உங்களது அரசுக்கான ஆதரவினை திமுக வாபஸ் பெரும் காங்கிரஸ் கட்சி தலைமையை நோக்கி அறிவிக்காமலேயே.

அதனை தொடர்ந்து, போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக சொன்னீர்கள். அங்கு தமிழர்கள் மீது தாக்குதல் தொடர்கிறதே என கருணாநிதி அவர்களிடத்தில் செய்தியாளர்கள் எழுப்பப்பட்ட கேள்விக்கு " மழை விட்டும் தூவானம் விடவில்லை" என தனக்கே உரிய நயத்துடன் கூறிச் சென்றார்.

எத்தனையோ செயல்களுக்காக நினைவு கூறப்படப்போகும் கருணாநிதி அவர்கள் மேற்கண்ட வசனத்திற்காகவும் நினைவு கூறப்படுவார் என்றால் அதில் மிகையில்லை.