Aug 20

காமராஜரை உயிரோடு எரித்துக்கொல்ல முயன்ற கூட்டம்.. ஏன்.. எப்போது.?

தமிழகம் கண்ட நேர்மையான, எளிய மக்களின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை கொண்டிருந்த அரசியல் தலைவர்களுள் முதன்மையானவர் காமராஜர். மாற்று முகாம்களில் உள்ளவர்கள் கூட அவரிடத்தில் மிகுந்த மரியாதையும், பற்றுதலையும் கொண்டிருந்தனர். அப்படியானவரையும் உயிரோடு எரித்துக்கொல்ல முயன்றது ஒரு கூட்டம். அது எப்போது, ஏன் தெரியுமா?


இப்போது மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க கோரி எளியவர்களை தாக்கி வரும் சங் பரிவார கூட்டம் தான், 1996 ஆம் ஆண்டும் பசுவதை தடை சட்டத்தை அமல்படுத்த கோரி நாடாளுமன்றத்தினை படையெடுத்து முற்றுகையிட்டது இந்துத்துவ அமைப்புகள்.

பாரதீய ஜன் சங் அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரநாத் தலைமையில் ஊர்வலமாக வந்த கூட்டம், நாடாளுமன்றம் உள்ள தெருக்களில் இருந்த கடை, அலுவலகங்கள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கியது.

தொடர்ந்து அதே தெருவில் காமராஜர் வசித்த வீட்டிற்கும் தீ வைத்தது. அதிர்ஷ்டவசமாக உதவியாளரின் உதவியால் உயிர் தப்பினார் காமராஜர். காமராஜரை குறிவைக்க காரணம், அவர் பசுவதை தடை சட்டம் கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்தார் என்பது வெளிப்படையான உண்மை.