Aug 20

கேரள வெள்ளத்தில் காணாமல் போனோரை கண்டறிய கூகிளின் புதிய அப்ளிகேசன்!

கேரளாவில் கடந்த மே மாதம் 29ம் திகதி தொடங்கிய தென் மேற்கு பருவமழை கடந்த 8ம்திகதி முதல் தீவிரமடைந்துள்ளது. அங்குள்ள 14 மாவட்டங்களிலும் இடைவிடாது பெய்துவரும் மழையால் மாநிலம் முழுவதும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.


நிலச்சரிவு மற்றும் வெள்ளநீரில் சிக்கி 324 பேர் பலியாகியுள்ளனர். எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக இருப்பதால் எந்தவொரு அடிப்படை வசதிகளும் இன்றி மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.

வெள்ளத்தில் தவிக்கும் கேரள மாநிலத்துக்கு உதவ பல்வேறு தரப்புலிருந்தும் உதவிக்கரங்கள் நீள்கின்றன.

செங்கணூரில் மீட்பு பணியில் ஈடுபட்ட 10 பேரை காணவில்லை மேலும், மாநிலம் முழுவதும் 100க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போய் உள்ளனர்.

இதன் காரணமாக காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்காக கூகுள் புதிய அப்ளிகேஷன் ஒன்றை அறிமுப்படுத்தியுள்ளது.

இந்த அப்ளிகேஷனை கம்யூட்டர் அல்லது கைப்பேசிகளில் பயன்படுத்தலாம்.

கூகுள் தேடுதல் பக்கத்தில் http://g.co/pf என பதிவிட்டு, வெள்ளப் பாதிப்புக்கு உள்ளான இடங்களைக் குறிப்பிட்டு பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை் மற்றும் தகவலைப் பெறலாம்.