Aug 20

காதல் திருமணம் செய்த பெண்ணை காணவில்லை


பதுளை, ஹாலி-எல, றொசைட் தோட்டம் இரண்டாம் பிரிவை சேர்ந்த மகாலிங்கம் நிஷாந்தினி என்ற பெண்ணை கடந்த 25 நாட்களாக காணவில்லை என அவரின் கணவர் தியாகராஜா ராஜ்குமார், மட்டக்குளிய பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார். 

காதல் திருமணம் முடித்து, கொழும்பு மட்டக்குளிய இல. 47 ஜீ சமத்திபுர எனும் முகவரியில் இவர்கள் இருவரும் வசித்த வந்ததாகவும், இவர்கள் இருவரும் வியாபாரம் ஒன்றை மேற்கொண்டு வந்த வேளை, திடீர் என குறித்த பெண் காணாமல் போயுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. 

குறித்த பெண்னை இனங்கண்டால் அருகாமையில் இருக்கின்ற பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது மட்டகுளிய பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 0703 397960, 0769 746545 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தகவலை வழங்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். 

இதேவேளை, குறித்த பெண்ணின் கணவர் மஸ்கெலியா, சாமிமலை பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கபடுகிறது. 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மட்டக்குளிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.