Aug 20

தினசரி 40 சிகரெட்டுகளை ஊதித் தள்ளும் 2 வயது சிறுவன்: விளையாட்டு வினையான சம்பவம்..!!

சில நேரம் புகைக்க சிகரெட் கிடைக்காதபோது அடம்பிடித்துள்ளதாகவும், கட்டுப்படுத்த முடியாது போவதால் நாள் ஒன்றுக்கு 2 பாக்கெட் சிகரெட் வாங்குவதாகவும் சிறுவனின் தாயார் ஒப்புக்கொண்டுள்ளார்


டீ குடிக்கும் போது அல்லது கேக் சாப்பிடும்போதும் சிறுவன் புகைப்பதாக கூறும் அவனது தாயார், கடந்த 2 மாதங்களாக தினசரி சிகரெட் புகைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அவன் சிகரெட் கேட்கும்போது இல்லை என்றால் வன்முறையில் இறங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது தினசரி 40 சிகரெட்டுகள் புகைக்கும் சிறுவனின் தந்தையும் புகைக்கு அடிமைதான் என்றாலும், தமது மகனின் இந்த பழக்கத்திற்கு என்ன காரணம் என தெரியவில்லை என்றார்.

உலகில் மிக அதிக சிகரெட் புகைக்கும் நபர்கள் கொண்ட நாடு இந்தோனேசியா. மட்டுமின்றி இந்தோனேசிய மக்கள் தொகையில் 19 வயதுக்கும் குறைவான சுமார் 9 விழுக்காட்டினர் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமைகளாக உள்ளனர்