Aug 20

சீன வலைத்தளத்தில் மோட்டோ ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா ஒன் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் XT1941 என்ற மாடல் நம்பருடன் சீன வலைத்தளமான TENAA-வில் லீக் ஆகியுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போனின் புகைப்படங்களும் லீக் ஆகியுள்ளன. புகைப்படங்களில் உள்ள ஸ்மார்ட்போன், கடந்த வாரம் சீனாவில் அறிமுகமான மோட்டோ P30 ஸ்மார்ட்போன் போன்றே காட்சியளிக்கிறது. 

வலைத்தளத்தில் வெளியாகியுள்ள தகவல்களின் படி புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் 5.86 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 ரக டிஸ்ப்ளே, 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் சிப்செட், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 13 எம்பி பிரைமரி கேமரா, இரண்டாவது பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா, இரண்டாவது செல்ஃபி வழங்கப்படுகிறது.

புகைப்படங்களின் படி இந்த ஸ்மார்ட்போன் மெட்டல் ஃபிரேம், முன்பக்க ஸ்கிரீனின் கீழ் மோட்டோரோலா லோகோ இடம்பெற்றிருக்கிறது. கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனின் பின்புறம் பொருத்தப்பட்டுள்ளது.

மோட்டோரோலா ஒன் ஸ்மார்ட்போன் பிளாக், கோல்டு மற்றும் வைட்/சில்வர் நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் இம்மாதத்தில் நடைபெற இருக்கும் ஐ.எஃப்.ஏ. விழாவில் மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.